கடந்த 24 மாதங்களில் 25 வெளிநாட்டு பயணங்களை ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மேற்கொண்டிருந்தார் என வெகுசன ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்றையதினம்(21) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.
25 வெளிநாட்டு பயணங்கள்
இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“இன்று சபையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பயணங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பட்டுள்ளது.
இதனை அறிவிப்பதற்கு எமக்கு கால அவகாசம் வேண்டும்.
ஏன் எனில் ரணில் விக்ரமசிங்க 24 மாதங்களில் 25 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
எனவே ரணில் மேற்கொண்ட ஒவ்வொரு விஜயம் தொடர்பாக நாம் வெவ்வேறாகவே பார்க்கவேண்டும்.
இதனை சபைக்கு அறிவிப்பதற்கு பிரதமர் இரண்டு வாரகால அவகாசம் வேண்டும். அதன் பின்னர் சபைக்கு அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.