Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் அரசியல் வியூகம் தோற்கடிக்கப்படுமா!

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் அரசியல் வியூகம் தோற்கடிக்கப்படுமா!

0

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவதற்காக அமைக்கப்பட்ட வியூகமே 39 வேட்பாளர்கள் என முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriya)  தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த தேசிய வாத வாக்குகள், இராணுவ பின்னணியான வாக்குகள், ஊழல் முறைகேட்டுக்கு எதிரான வாக்குகள், புதிய பொருளாதார திட்டங்களுக்கான வாக்ககள் என ஒவ்வொரு பின்னனியிலும் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு(Anura Kumara Dissanayake) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வாக்குகள் கிடைக்காமல் பிரிக்கப்படுகின்றது.

இந்த பின்னனியுடனே பொருளாதார வீழ்ச்சி யுகத்தின் உச்சமாக எரிபொருள், எரிவாயு வரிசை கலாச்சாரத்துக்கு நான்தான் முடிவுகட்சியதாக கூறும் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எரிவாயு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்புகின்றார்களா அல்லது புதிய மாற்றத்தை வெளிப்படுத்துகின்றார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.

எனினும் ஒரு ஜனாதிபதி தேர்தல் களத்துக்கு அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலமாக பார்க்கப்படுகின்றது.

இந்த வகையில் இம்முறை தேர்தல் களத்தினை ஆராய்கின்றது இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி….

https://www.youtube.com/embed/nBI9gtMhcXA

NO COMMENTS

Exit mobile version