Home இலங்கை அரசியல் புதிய கூட்டணி அமைக்க தயாராகும் ரணிலின் ஆதரவாளர்கள்!

புதிய கூட்டணி அமைக்க தயாராகும் ரணிலின் ஆதரவாளர்கள்!

0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து பொதுத் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்படும் வகையில் இந்த புதிய கூட்டணி உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டணி அடுத்தவாரம் அங்குரார்ப்பணம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

67 எம்.பி.க்கள் 

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முதலில் முன்வந்த எம்.பி.க்கள் குழுவில் 91 பேர் இருப்பதாகவும், தற்போது ரணிலுக்கு நிரந்தரமாக ஆதரவளிக்க 67 எம்.பி.க்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நேற்று தெரிவித்திருந்தார்.

இதன்படி, இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் இந்த கூட்டணியை அமைப்பதற்கு எஞ்சிய எம்பிக்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பொதுச் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்படவுள்ளதாக கனக ஹேரத் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமக்கு ஆதரவளிக்கும் மொட்டு கட்சியின் உறுப்பினர்களின் வெற்றியை மக்கள் பார்க்க வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் ஊடகப் பிரதானிகளிடம் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார். 

NO COMMENTS

Exit mobile version