ரணில் – சஜித் ஒன்றிணைவானது தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எவ்விதத்திலும்
சவாலாக அமையாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
“எதிர்க்கட்சிகளுக்கு சவால் என்பதாலேயே ஒன்றிணைந்து பயணிப்பது பற்றி
பரிசீலிக்கின்றன. அது அந்தத் தரப்புகளின் சுயநல அரசியலின் வெளிப்பாடாகும்.” என்றும் அமைச்சர் கூறினார்.
வங்குரோத்து அரசியல்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த வேளை ரணில் – சஜித் தரப்புகள்
ஒன்றிணையவில்லை.
போர் நடந்த கால கட்டத்தில்கூட இணைந்து பயணிக்கவில்லை. அவர்கள்
தற்போது இணைகின்றனர் எனில் அது அவர்களின் வங்குரோத்து அரசியலை
வெளிப்படுத்துகின்றது.” என்றார்.
