Home உலகம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா

உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா

0

அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் (Ukraine) இடையிலான போர் தொடங்கி மூன்று ஆண்டுகளை கடந்து விட்டது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அணுசக்தி ஏவுகணை

இருப்பினும், போர் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்த சூழலில், அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக புடின் அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு படை

கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையான புரெவெஸ்ட்னிக், சுமார் 15 மணிநேரம் தொடர்ச்சியாக பறந்து சென்று 14,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தது.

பாதுகாப்புத்துறை தளபதி மற்றும் இராணுவ கமாண்டர்களுடன் காணொளி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின் போது புரெவெஸ்ட்னிக் ஏவுகணையை பாதுகாப்பு படையில் இணைப்பதற்கான உள்கட்டமைப்பை தயார் செய்ய அவர் உத்தரவிட்டார்.

உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாத நிலையில், தற்போது அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றியடைந்திருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version