எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியவற்றுக்கு இடையே
நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தை, வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இதன்படி, இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய
முன்னணியின் கீழ் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உடன்பாடு எட்டப்பட்ட நேற்றைய சந்திப்பு
முன்னதாக தேர்தல்களில் குறித்த இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன,
இதன் விளைவாக, இரண்டு தரப்பு பிரதிநிதிகளும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற
முடியவில்லை.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே மீண்டும் ஒன்றிணைய இரண்டு கட்சிகளின்
தரப்புக்களில் இருந்தும்; வலுவான அழைப்புகள் விடுக்கப்பட்டு வந்தன.
இதன் அடிப்படையிலேயே தற்போதைய ஒன்றிணைவு பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் உடன்பாடு எட்டப்பட்ட நேற்றைய சந்திப்பில் ஐக்கிய
தேசியக்கட்சியின் உறுப்பினர்களான ருவன் விஜேவர்தன, தலதா அத்துகோரல
உட்பட்டவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் கயந்த கருணாதிலக்க, ஹர்சன ராஜகருணா
மற்றும் பலரும் பங்கேற்றுள்ளனர்.