Home இலங்கை அரசியல் மீண்டும் விசேட உரையாற்றுகிறார் அதிபர் ரணில்

மீண்டும் விசேட உரையாற்றுகிறார் அதிபர் ரணில்

0

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் விசேட உரையாற்றவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், நாளை (02) இடம்பெறவுள்ள விசேட நாடளுமன்ற அமர்விலேயே அதிபர் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அதிபர் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்

இதேவேளை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (01) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில், அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, மூன்று உடன்படிக்கைகளில் ஒன்று இன்னும் கைச்சாத்திடப்படவில்லை என்பதே அதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை நடைபெறவிருந்த இதனுடன் தொடர்புடைய பிரேரணை தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version