Home இலங்கை அரசியல் கொழும்பில் முக்கிய சந்திப்பில் ரணில் ஆதரவு தரப்பினர்

கொழும்பில் முக்கிய சந்திப்பில் ரணில் ஆதரவு தரப்பினர்

0

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள கூட்டணி மற்றும் சின்னம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பு, பளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்திலேயே இந்த பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது, பொதுச் சின்னமாக எரிவாயு சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியை, புதிய ஜனநாயக முன்னணி கோரியிருந்தது.

 

 

தேர்தல் ஆணைக்குழு அனுமதி 

இந்த கோரிக்கைக்கமைய, தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே, புதிய ஜனநாயக முன்னணியாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க, இந்த தரப்பினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தரப்பினர் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த தரப்பினர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த கூட்டணியின் கீழ் களமிறங்கவுள்ளனர்.

இதுதொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

 

 

NO COMMENTS

Exit mobile version