Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு: ஈழவர் ஜனநாயக முன்னணியின் நிலைப்பாடு

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு: ஈழவர் ஜனநாயக முன்னணியின் நிலைப்பாடு

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவிற்கு தாம் வந்துள்ளதாக, ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இராஜநாதன் பிரபாகரன் (Rajanathan Prabhakaran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்திற்கான ஸ்மார்ட் தேர்தல் அலுவலகத்தை வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள கறுவாக்கேணியில் இன்று (27) திறந்து வைத்து உரையாற்றுகையிலயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியான எங்களது இயக்கம் இன்று வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் அகில இலங்கை
ரீதியாகவும் உள்ள ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு முழு மனதுடன் களத்தில் இறங்கி
வேலை செய்து கொண்டு இருக்கின்றோம்.

ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) மீண்டும்
ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கான காரணம், அவரை எனக்கு நன்கு தெரியும் எனது மிக நீண்ட நாள் நண்பன். கொரோனாவால் நாடு
பாதிக்கப்பட்டிருந்தது.

அதே போன்று அரகல என்று ஒரு கீழ்த்தரமான செயற்பாட்டால் நாடு
பின் நோக்கிப்போனது. குழந்தைகளுக்கு பால்மா இல்லை, சுகயீனமான ஒருவரை
வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முச்சக்கரவண்டிக்கு பெற்றோல் இல்லை.

எதை
எடுத்தாலும் தட்டுப்பாடு, இச்சந்தர்ப்பத்தில் கோட்டாபய (Gotapaya Rajapaksa) நாட்டை யாராவது பாரம்
எடுங்கள் என்று ஒப்பாரி வைத்த தருணம் அந்த சந்தர்ப்பத்தில் யாரும் வரவில்லை. அப்போது நாட்டை துணிந்து வந்து பாரம் எடுத்த ஒரே மனிதன் இன்றைய
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான்.

இன்று பெற்றோலுக்கு தட்டுப்பாடில்லை, பால்மா இலகுவாக கிடைக்கின்றது,
மருந்துக்கு தட்டுப்பாடில்லை இலகுவான போக்குவரத்து மூன்று இன மக்களும்
சந்தோசமாக வாழ்கின்றனர்.

நல்ல மனிதர்

அது மட்டுமல்ல இன்று சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய
தலைவர் யார் என்றால் அது ரணில் விக்ரமசிங்க தான், இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு,
நாட்டை பாதுகாக்க வல்லமையுடைய ஒரே ஒரு தலைவர் என்றால் இன்றைய ஜனாதிபதிதான்
என்பதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்காது.

சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஒரு நல்ல மனிதர் நாட்டை நேசிக்கக்கூடிய மனிதர் மக்களை
நேசிக்ககூடிய மனிதர் அதே போன்றுதான் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), ஆனால் நாட்டை
முன்னேற்க்கூடிய மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய மேற்குலக நாடுகளுடனான தொடர்பாடல் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கும் கிடையாது

ஈழவர் ஜனநாயக முன்னனியின் செயலாளர் நான். ஆனால் இன்று வவுனியாவில்
கொள்ளையடித்துக் கொண்டு சூரையாடிக் கொண்டு குடிவெறியில் திரிந்த நான்கு ஐந்து
பேரை நான் கட்சியில் இருந்து துறத்திவிட்டேன்.

ஈரோஸ் அமைப்பு

துசியந்தன் என்று வவுனியாவை
சேர்ந்த நபர், இராசநாயகம் என்று இன்னுமொருவர் ஈரோசுக்கும் இவர்களுக்கும் எந்த
தொடர்பும் இல்லை ஈரோஸ் எந்த கால கட்டத்திலும் யாரையும் காட்டிக் கொடுத்தோ, கப்பம் வாங்கியோ கொள்ளையடித்தோ வாழ்ந்த சரித்திரம் இல்லை.

அப்படி யாராவது சொல்வார்களாக இருந்தால் இந்த கட்சியை கலைத்து விட்டு செல்ல
நான் தயாரக இருக்கிறேன் கட்சியின் பெயரை வைத்து தவராக செயட்பட்ட சிலரை
கட்சியில் இருந்து துறத்தி விட்டு இருக்கிறேன்.

அந்த கூட்டம் சஜித் பிரேமதாசவை
சந்தித்து நாங்களும் ஈரோஸ் அமைப்பு நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் என்று எங்களது
கட்சியின் பெயரை பயன்படுத்திக் கொண்டு திரிகின்றார்கள் இவ்வாறானவர்களை பொது
மக்கள் இனம்காண வேண்டும்” என்றார்.

மேலும், இந்த நிகழ்வில் வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள
செனரத், வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஜக்கிய தேசிய
கட்சியின் வட்டார அமைப்பாளர் பி.லட்சுமி மற்றும் பி.ரதேச அமைப்பாளர்கள் என
பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version