Home இலங்கை அரசியல் பிணைக்கு பின்னர் ரணில் தொலைபேசியில் தொடர்புகொண்ட முதல் நபர்

பிணைக்கு பின்னர் ரணில் தொலைபேசியில் தொடர்புகொண்ட முதல் நபர்

0

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பிணை வழங்கப்பட்ட பின்னர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதன்படி“ தனக்காக எடுத்த நடவடிக்கைகளுக்கு உங்களுக்கும், எதிர்க்கட்சித் தரப்புக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என ரணில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை

 மேலும் “தான் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

அதன் பிறகு, அனைத்துத் தலைவர்களையும் சந்திப்பேன்,” என்று ரணில் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதில் வழங்கிய சஜித், இந்த செயல்முறையை நான் எப்போதும் நிறுத்த மாட்டேன்” என கூறியுள்ளார்.

தற்போது ரணில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version