Home இலங்கை அரசியல் சிங்களவர்களின் காட்டிக் கொடுப்பின் ஒரு செயற்பாடே ரணிலின் கைது!

சிங்களவர்களின் காட்டிக் கொடுப்பின் ஒரு செயற்பாடே ரணிலின் கைது!

0

சிங்களவர்களை காட்டி கொடுத்தவர்கள் தமிழ் – முஸ்லிம் மக்கள் அல்ல. சிங்களவர்களே காட்டிக் கொடுத்தனர். அதன் ஒரு பக்கமே ரணில் விக்ரசிமங்கவின் கைதின் பிரதிபலனாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வில் சில்வா தெரிவித்துள்ளார்.

ரணிலின் கைதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து மேற்கொண்ட ‘நீதிக்கான குரல்’போராட்டத்திற்கு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர், ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் இந்த நாட்டை பாரமெடுத்து சீராக ஆட்சி செய்து கொண்டிருக்கையில் மொல்லிகொட மற்றும் பிலிமதலாவலா இணைந்து ஹோலேபெலவை வெளியில் விரட்டி அவரின் குடும்பத்தையே நாசம் செய்தனர்.

ஆட்சி செய்த தலைவர்கள்

அவ்வாறே மொல்லிகொட மற்றும் பிலிமதலாவலா இன்றும் இருக்கிறார்கள். இந்நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அனைவருக்கும் தனது பெயருக்கும் முகத்துக்குமே வெற்றி பெற்றனர். அதேபோல அநுரகுமார திசாநாயக்கவுக்கும் மக்கள் வாக்களித்தனர்.

இன்று நாடாளுமன்றில் இருக்கும் யாரையும் மக்களுக்கு தெரியாது. அவர்கள் ஜனாதிபதி அநுரவின் முகத்திற்கே வாக்களித்தனர்.

இன்று கூச்சலிடும் யாருக்கும் மக்கள் வாக்களிக்கவில்லை. ஆதலால் அவர் இவற்றை அறிந்து செயலாற்றி நாட்டை முன்னோக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.        

NO COMMENTS

Exit mobile version