Home முக்கியச் செய்திகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) பிணை வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (26) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி, ரணில் விக்ரமசிங்க தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை

அத்துடன் குறித்த  வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (26) வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி அங்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அவர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர் zoom தொழிநுட்பம் மூலம் வழக்கு விசாரணையில் இணைந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கக்கு பிணை வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/gBafuzg3x_Ehttps://www.youtube.com/embed/gBafuzg3x_E

NO COMMENTS

Exit mobile version