Home இலங்கை பங்களாதேஷ் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும்: ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

பங்களாதேஷ் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும்: ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

0

பங்களாதேஷில் (Bangladesh) நிலைமை விரைவில் சீரடையும் என்று தாம் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று (06) இடம்பெற்ற மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  “ஷேக் ஹசீனா (Sheik Hasina) பிரதமர் பதவியை விட்டு விலகிய போதிலும், நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது அவர் 200 மில்லியன் டொலர்களை நம் நாட்டிற்கு வழங்கியதை நான் நினைவுகூர வேண்டும்.

ஷேக் ஹசீனா

சிறையிலிருந்து கலிதா சியா (Khaleda Zia) விடுதலை செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஷேக் ஹசீனா நீண்ட காலத்திற்கு முன்பே இதைச் செய்திருந்தால், அவர் இன்னும் பங்களாதேஷின் பிரதமராக இருந்திருக்க முடியும். 

குறுகிய காலத்தில் பங்களாதேஷ் மீண்டு வரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இலங்கையில் எங்களுக்கு நடந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

வேலை வாய்ப்பு

பங்களாதேஷின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவராக நாங்கள் இருப்பதால், அந்த நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.

இவ்வுலகில் நிலைமைகள் சரியில்லை என்பதை இந்நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் இந்த திட்டங்களில் இருந்து இலங்கை (Sri Lanka) விலகும் என்று அர்த்தமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version