எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக போட்டியிடமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara) புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) தமக்கு தெரியும் எனவும் அதனால் அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை என்பதில் 100 வீதம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தப்போகும் பெரமுன
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது எனக் கூறும் அவர், பொதுஜன பெரமுன வேறு ஒரு வேட்பாளரை ஏற்கனவே முன்வைத்து வருவதாகத் தெரிகிறது.
ரணிலுடன் இணைந்துள்ளவர்களுக்கு பாரிய சவால்
அவ்வாறான ஒரு வேட்பாளரை முன்வைத்தால் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளவர்களும் பாரிய சவாலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.