ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இணைய சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்
அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அது ஏற்படுத்திய சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறைக்கும் கடும் நெருக்கடி
9ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டமை பிழையானது எனக் கூறி மன்னிப்புக் கோருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ள சூழலில் நீதித்துறையும் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/-UHg7J7aEq0