Home முக்கியச் செய்திகள் ரணில் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்: வெளியாகியுள்ள அதிரடி அறிவிப்பு

ரணில் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்: வெளியாகியுள்ள அதிரடி அறிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தேசியப் பட்டியலின் ஊடாகவும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதிரடி அறிவிப்பு

அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் நுழையவோ மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் வஜிர அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நேற்று(23) இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இரு குழுக்களும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் தேர்தலில் கூட்டணியொன்றை முன்வைக்க இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version