ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கூற்றின் மூலம் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விடாது என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக சர்வதேச நிறுவனங்கள் ஒப்புக்கொள்ள வேண்டுமென ஹந்துனெத்தி கூறியுள்ளார்.
“நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக அறிவிப்பதற்கு ஓர் செயன்முறை உண்டு.
மக்கள் ஆணையுடன் கூடிய ஆட்சி
மக்கள் ஆணையுடன் கூடிய ஆட்சியொன்றை நாட்டில் ஸ்தாபிக்க வேண்டியது முதன்மையானது.
நாட்டை கடனாளியாக்கிய தலைவர்களினால் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கிட முடியாது.
மேலும், புதிய மக்கள் ஆணையுடன் கூடிய ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்பு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
இந்த விடயம் குறித்த கட்சியின் நிலைப்பாடு சர்வதேச நாணய நிதியத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.