Home அமெரிக்கா டொனால்ட் டிரம்பின் கிரீன் கார்ட் திட்டம்

டொனால்ட் டிரம்பின் கிரீன் கார்ட் திட்டம்

0

அமெரிக்க (US) பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு கிரீன் கார்ட் வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்தவுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு குடியேற்றக் கொள்கைகளை தளர்த்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நிரந்தர குடியுரிமை அட்டை எனவும் அறியப்படும் குறித்த கிரீன் கார்ட் ஆனது அமெரிக்காவில் நிரந்தரமாக வாழவும் தொழிலில் ஈடுபடவும் தனிநபர்களுக்கு உரிமையை அனுமதிக்கும் முகமாக வழங்கப்படுவதாகும். 

 நிரந்தர வதிவிடம் 

இதற்கமைய, குறித்த கார்ட்டினை பெறும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்தை பெறுவார்கள். 

இந்நிலையில், அமெரிக்காவில் பட்டம் பெற்ற இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதை டிரம்ப் கட்டுப்படுத்துவார் எனவும் தெரவிக்கப்படுகின்றது. 

மேலும், புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கடுமையான கொள்கைகளை கடைபிடித்து வந்த டிரம்ப் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version