Home இலங்கை அரசியல் ரஞ்சன் ராமநாயக்க தரப்பில் விரிசல்: கட்சியில் இருந்து வெளியேறிய வேட்பாளர்

ரஞ்சன் ராமநாயக்க தரப்பில் விரிசல்: கட்சியில் இருந்து வெளியேறிய வேட்பாளர்

0

Courtesy: Sivaa Mayuri

பொது தேர்தலில் களமிறங்கியுள்ள ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஒருவர் பல்வேறு காரணங்களை முன்வைத்து,  கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரசன்ன அதிகாரி என்ற குறித்த வேட்பாளர்,

கட்சியின் சட்டபூர்வமான தன்மை மற்றும் அதன் உரிமை குறித்து கேள்வி எழுப்பிய நிலையிலேயே கட்சியில் இருந்து விலகுகிறேன்.

பிரஜா உரிமை

பிரஜா உரிமை இல்லாத தலைவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதாகவும் இரட்டைக் குடியுரிமை கொண்ட மற்றொரு வேட்பாளர் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நினைத்தாலும், முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே இந்த இரண்டு வேட்பாளர்களும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் போது அது சட்டப் பிரச்சினையாக மாறும்.

எனவே இந்தக் கேள்விகளுக்குப் தமக்கு பதில் அளிக்கப்பட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version