Home இலங்கை அரசியல் ரன்வலவின் வாகன விபத்து! நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நீண்ட அறிக்கை

ரன்வலவின் வாகன விபத்து! நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நீண்ட அறிக்கை

0

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் வாகன விபத்தில்
இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் காயமடைந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நீண்ட அறிக்கையை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மேற்படி விடயம் குறித்து தனது கருத்துக்களை வெளியிட எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் நடந்து கொண்ட விதம்

அந்த சம்பவத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் குறித்து சமூகத்தில் கடுமையான குற்றச்சாட்டு இருப்பதால், அது நிச்சயமாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விபத்தில் ஏற்பட்ட காயங்கள் குறித்து அரசாங்கம் இன்னும் விசாரிக்கவில்லை என்று கூறிய முஜிபுர் அரசாங்க எம்.பி.க்களின் தவறுகளை மூடிமறைத்து எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவது அரசாங்கத்தின் கொள்கையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விபத்து குறித்து பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் கருத்து தெரிவிக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version