Home இலங்கை அரசியல் ஜனாதிபதிக்கு ஊடகம் தொடர்பில் அறிவுரை கூறும் எதிர்க்கட்சி உறுப்பினர்

ஜனாதிபதிக்கு ஊடகம் தொடர்பில் அறிவுரை கூறும் எதிர்க்கட்சி உறுப்பினர்

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை பிரபலப்படுத்தும் ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனமாக இருக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு அவதூறு

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்க்கட்சித் தலைவரை அவதூறாகப் பேசும் ஊடகங்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கே செயல்படுகிறது.  பேரிடரில் அழிக்கப்பட்ட நான்கு மருத்துவமனைகளுக்கு சஜித் பிரேமதாச அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்கியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிதி மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதி எதிர் கருத்துக்களைக் கொண்ட அரசியல்வாதிகளை அவதூறாகப் பேசுவதற்குப் பயன்படுத்தப்படவில்லை.

அரச அதிகாரம் இல்லாமல், பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் சேவை செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version