நடிகர் சுதீப் கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர். தமிழிலும் அவர் சில படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது சுதீப் நடித்து இருக்கும் மார்க் என்ற படம் வரும் டிசம்பர் 25ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனால் படத்தை ப்ரோமோஷன் செய்ய பல நிகழ்ச்சிகளை நடந்து வருகின்றனர்.
நேற்று சென்னையில் பிரெஸ் மீட் நடந்த நிலையில் சுதீப் மற்றும் மொத்த படக்குழுவும் கலந்துகொண்டனர்.
டென்ஷன் ஆன சுதீப்
படத்தின் ஹீரோயின் ஓரமாக அமர்ந்து இருக்க, அது பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். “உங்களை ஓரமாக உட்கார வைத்து இருக்கிறார்கள். படத்தில் உங்களுக்கு எதாவது வசனம் அதிகமாக இருக்கிறதா” செய்தியாளர் கேள்வி கேட்டார்.
அதனால் கோபமான சுதீப் உடனே எழுந்து அந்த இரண்டு நடிகைகளையும் எல்லோருக்கும் நடுவில் இருக்கும் தனது சேரில் அமரவைத்தார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
