வால் நட்சத்திரம் ஒன்று சுமார் 80,000 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய (India) வான் பகுதியில் தென்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சி/2023 ஏ3 என பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்த வால் நட்சத்திரமானது சூரியனின் மிக அருகே சென்ற நிலையில் இதை தொடர்ந்து அந்த வால் நட்சத்திரத்தின் பயணம் திசை திரும்பியுள்ளது.
வால் நட்சத்திரம்
இதன் காரணமாக, பூமியில் இருந்து அதை காணலாமெனவும் அடுத்த 80,000 ஆண்டுகளுக்கு இந்த வால் நட்சத்திரத்தை காண முடியாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறிய தொலைநோக்கிகள் அல்லது பைனாகுலர்கள் கொண்டு பார்க்கும் போது, அதன் நீண்ட வால் போன்ற பகுதியை தெளிவாக காணலாமென தெரிவிக்கப்படுகின்றது.
அரிய நிகழ்வு
காலை நேரத்தில் சூரிய உதயத்திற்கு சில மணிநேரத்திற்கு முன்பு கிழக்கு திசையின் கீழ் பகுதியில் இதனை பார்க்கலாம் என்று வானியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
எனினும், சூரியன் மறைவுக்கு பின்னர் மேற்கு திசையில் இதனை பார்ப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.