Home இலங்கை சமூகம் யாழில் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

யாழில் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

0

யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (16) அவரால் வெளியிடப்பட்ட  செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களின் குருதி மாதிரிகள் 

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 11 பேரும் இந்நோய்க்காகச் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு 4 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை (14) இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இதுவரை யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களின் குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தன.

இவர்களில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், எலிக்காய்ச்சல் அபாயம் மீண்டும் தீவிரம் பெற்று வரும் நிலையில் கள
உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் பருத்தித்துறை பிரதேச
செயலகத்தில் இடம்பெற்றது. 

NO COMMENTS

Exit mobile version