Home இந்தியா இந்திய ரூபாயில் இலங்கை உடன் வர்த்தகம் – இந்திய ரிசர்வ் வங்கியின் நகர்வு

இந்திய ரூபாயில் இலங்கை உடன் வர்த்தகம் – இந்திய ரிசர்வ் வங்கியின் நகர்வு

0

இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) முன்மொழிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரூபாயில் கடன்

கூடுதலாக, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிராந்திய வர்த்தகத்தில் அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அதன் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு அதிகாரப்பூர்வ மாற்று வீதத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version