Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்: சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்: சர்வதேச நாணய நிதியம்

0

சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் (Sri Lanka) கலந்துரையாடல்களுக்கு
ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.

இரண்டு தரப்புக்களும் கொள்கையளவில் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டிய பின்னர் தமது தரப்பு முறையான மதிப்பீட்டை வழங்கும் என்று ஐ.எம.எப்.இன் பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதல் தொடர்பில் ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை

கடன் மறுசீரமைப்பு

சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் அளவுருக்கள் மற்றும் உத்தியோகபூர்வ
கடனாளிகளின் மறுசீரமைப்பு தேவைகளின் ஒப்பீட்டுத் தன்மை ஆகியவற்றுடன்
ஒத்துப்போகும் ஒப்பந்தம், திட்டத்தின் கீழ் இரண்டாவது மதிப்பாய்வை
முடிப்பதற்கு முன்னதாக விரைவில் எட்டப்படும் என்று தாம் நம்புவதாக பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் சுமார் 12 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைக்க
பத்திரப்பதிவுதாரர்களுடன் உடன்பாட்டை எட்டத் தவறியதாக இலங்கை கூறியிருந்துள்ளது.

இதன் காரணமாக, ஜூன் மாதத்தில் நாடு தனது 2.9 பில்லியன் டொலர் திட்டத்தில்
மூன்றாவது தவணையைப் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்ற கவலையை
எழுப்பியிருந்துள்ளது.

இந்தநிலையில், இரு தரப்பினரும் தங்கள் விவாதங்களை விரைவாக தொடர ஊக்குவிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நெருப்பின் நடுவில் நாங்கள் இருக்கிறோம் : ஜோர்டான் பகிரங்கம்

யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version