வடக்கு மாகாணத்தில் சமீப காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகமாக பதிவாகின்றன.
நாளுக்கு நாள் பதிவாகும் விபத்துகளில் அநேகமாக இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அத்துடன் விபத்துகளினாலான மரணங்கள் என்பதை தாண்டி அங்கவீனத்துக்கு ஆளாகிறவர்களும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கிறார்கள்.
எனவே வடக்கில் விபத்துகள் அதிகரிக்க காரணமாக உள்ள பல்வேறு விடயங்கள் பற்றியும், விபத்துகளால் மருத்துவத்துறைக்கு ஏற்படும் சவால்கள், மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு விடயங்களையும் யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து பிரிவுக்கு பொறுப்பான சத்திர சிகிச்சை நிபுணர் எஸ். மதிவாணன் ஐபிசி தமிழின் முப்பரிமாணம் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்கின்றார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…..
https://www.youtube.com/embed/MZ7Gi1h_JH0
