தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களின் எண்ணிக்கை
அத்துடன் அமைச்சர்களின் எண்ணிக்கை எந்த நிலையிலும் 25 என்ற எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் பணிகளை துரிதமாக முன்னெடுக்க தேவையான பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சிலரை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்ததாகவும் அதற்கேற்பவே இன்று சில பொறுப்புகள் புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஜனாதிபதி முன்னிலையில் மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்றதன் மூலம், அமைச்சரவையில் உள்ள அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை 23 ஆகவும், பிரதி அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை 33 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/DyJTNa-Zdqw
