Home இலங்கை அரசியல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள 80 பாதாள உலக செயற்பாட்டாளர்கள்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள 80 பாதாள உலக செயற்பாட்டாளர்கள்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

0

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிவப்பு அறிவிப்புகள்

தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,

“பாதாள உலக செயற்பாட்டாளர்களில் 80 பேருக்கு சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்து அவர்களை நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

நாங்கள் இப்போது பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எதிரான எங்கள் நடவடிக்கையை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளோம்.

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இராஜதந்திர ரீதியாகவும், எங்கள் புலனாய்வாளர்கள் மற்றும் சர்வதேச பொலிஸ் அதிகாரிகளின் கூட்டு விசாரணைகள் மூலமாகவும், சிவப்பு அறிவிப்புகளை பிறப்பிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version