Home இலங்கை பொருளாதாரம் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி விற்பனை : வெளியான தகவல்

பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி விற்பனை : வெளியான தகவல்

0

பண்டிகை காலத்தில் மக்கள் தட்டுப்பாடின்றி முட்டை மற்றும் கோழி இறைச்சியை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முட்டையின் விலையும் தொடர்ந்தும் குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோழி இறைச்சி

தற்போது, சந்தையில் முட்டையின் விலை 28 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் இருக்காது என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் அஜித் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version