றீச்சா உணவுத் திருவிழாவில் வழங்கப்பட்ட அனைத்து உணவுகளும் மிக சுவையாக இருந்ததாக அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, வட மாகாணத்தில் இது ஒரு வித்தியாசமான நிகழ்வாக பார்க்கப்படுவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.
மேலும், ஒவ்வொரு உணவிலும் தனிச்சுவை இருந்ததாகவும் உணவை சுவைத்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த உணவுத் திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன் சுற்றுலா பயணிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
