வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல்
பகுதிகளுக்கு இன்று(11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநகரசபையின் அமர்வின் போது குறித்த உத்தரவினை முதல்வர் சு.காண்டீபன்
வழங்கியுள்ளார்.
வவுனியா மாநகரபை
குறிப்பாக வவுனியா நகரத்தில் உள்ள சில உணவங்களுக்கு
பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென சிறிய பகுதிகள் காணப்படுகின்றன.
இவ்வாறான பகுதிகளை உடன் தடை செய்யுமாறு மாநகர சுகாதார குழு பரிந்துரை
செய்துள்ளதையடுத்து குறித்த உத்தரவை மாநகர முதல்வர் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இவ் விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வவுனியா மாநகரசபை
தீர்மானித்துள்ளது.
