Home முக்கியச் செய்திகள் கடன் செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு நிதி அமைச்சின் நற்செய்தி

கடன் செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு நிதி அமைச்சின் நற்செய்தி

0

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மார்ச் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தொடர்புடைய வங்கிகளுக்குச் சென்று தங்களுக்குக் கிடைக்கும் நிவாரணம் குறித்து கலந்துரையாடலாம் என்றும் நிதி அமைச்சு கூறியுள்ளது.

[DNCEN

சிறப்பு நிவாரணம்

டிசம்பர் 15, 2024 நிலவரப்படி நிலுவையில் உள்ள மொத்த கடன் தொகையின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரூ.25 மில்லியன் குறைவான கடன்களை பெற்றுள்ளவர்களுக்கு 12 மாத கால அவகாசமும், ரூ.25 மில்லியன் முதல் ரூ.50 மில்லியன் வரையிலான கடன்களுக்கு ஒன்பது மாத கால அவகாசமும், 50 மில்லியனுக்கும் அதிகமான கடன்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், செலுத்த வேண்டிய மொத்த மூலதனத் தொகையின் அடிப்படையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான செலுத்தப்படாத வட்டியை 65 சதவீதம், 40 சதவீதம் போன்றவற்றால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பங்களிப்பு

அத்தோடு, இந்த தொழில்முனைவோருக்கு மூலதனக் கடன்களை வழங்குதல் மற்றும் பாதகமான கடன் நிலைமைகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறை ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிப்பதாக நிதி அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version