Home உலகம் அமெரிக்காவிற்கு கனடா வைத்த செக்: மீள முடியாத இடத்தில் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கு கனடா வைத்த செக்: மீள முடியாத இடத்தில் ட்ரம்ப்

0

தங்கள் மீது கூடுதல் வரிகளை விதித்தால் பதிலுக்கு பாரிய தொகையிலான வரிகளை விதிக்கவுள்ளதாக என கனடா (Canada) அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

அத்தோடு, அமெரிக்காவிற்கு (US) அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருட்களையும் இடைநிறுத்துவோம் என்றும் கனடா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் எச்சரிக்கை

ட்ரம்பின் குறித்த பட்டியலில் கனடாவும் சேர்க்கப்பட்டிருந்ததோடு, அதற்காக இராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்துள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து, கூடுதல் வரிகளை விதிப்பதாகவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கடுமையான வரி

இந்த நிலையில் ட்ரம்ப், கனடாவின் பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்க முடிவு செய்தால், அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரியை விதிப்போம் என்று கனடா எச்சரித்துள்ளது.

இதேவேளை, இதற்கான ஆரம்பப் பட்டியலை கனடா ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும், அமெரிக்கா என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து கனடா அமெரிக்காவிற்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கும் என்று என்று கனடா கூறியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version