குளக்கரையோரங்களில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் பணி, ஆளுங்கட்சி அரசியல்வாதியொருவருக்காக கைவிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் குளக்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றப்போவதாக காணி மற்றும் கமத்தொழில் அமைச்சர் லால்காந்த அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் அநுராதபுரம் பெரிமியன்குள கரையோரமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வடமத்திய மாகாண முன்னாள் ஆளுனர் மஹீபால ஹேரத்துக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று அண்மையில் இடித்து நொறுக்கப்பட்டிருந்தது.
சட்டவிரோத நிர்மாணங்கள் இடித்து அகற்றம்
எனினும் அதன் பின்னர் குறித்த செயற்பாட்டை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.டி..என்.கே. பலிஹேன என்பவருக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று அநுராதபுரம் திசாவெ வ குளக்கரையோரமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதே அதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.
ஏனைய சட்டவிரோத நிர்மாணங்களை இடித்து அகற்றினால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் கட்டடத்தையும் இடித்து அகற்ற வேண்டும் என்பதன் காரணமாக குறித்த செயற்பாட்டை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
