Home இலங்கை அரசியல் ரணில் விக்ரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடு

ரணில் விக்ரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடு

0

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொலை மிரட்டல் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடுவெல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரபாத் தர்ஷன மற்றும் சிலர் இணைந்து இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொல்ல வேண்டும் என்ற கோஷத்தை உள்ளடக்கிய பதிவொன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதுடன் நாளைய தினம் வரையில் அவருக்கு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version