Home முக்கியச் செய்திகள் யாழில் எரி காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்:வெளியான அதிர்ச்சி தகவல்

யாழில் எரி காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்:வெளியான அதிர்ச்சி தகவல்

0

யாழில்  வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய
சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று(25)தெல்லிப்பழை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73)
என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பீடி புகைப்பதற்கு முயன்றவேளை தீ விபத்து

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று(25)  மாலை அவரது மகள் வெளியே சென்றிருந்தார்.

இதன்போது குறித்த முதியவர் பீடி
புகைப்பதற்கு முயன்றவேளை படுக்கையில்  தீப்பற்றி, தீ விபத்துக்கு உள்ளாகி
உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.
ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/rescue-of-the-old-man-s-body-in-jaffna-1714072474?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version