Home உலகம் பிரான்சில் மாவீரர் சுடரில் சிகரட் பற்ற வைத்தவருக்கு இறுதியில் நேர்ந்த கதி

பிரான்சில் மாவீரர் சுடரில் சிகரட் பற்ற வைத்தவருக்கு இறுதியில் நேர்ந்த கதி

0

பிரான்சின் மாவீரர் பொதுச்சுடரில் சிகரட் ஒன்றை பற்ற வைத்த 47 வயதான மொராக்கோ குடியேறியின் வதிவிட உரிமை நீடிக்கப்பட மாட்டாதென பிரான்சின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த குடியேறியின் வதிவிட அனுமதி எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் சட்டபூர்மாக முடிவடையவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

முதலாம் உலகப் போரில் பிரான்சுக்காக மரணித்த வீரர்களின் நினைவாக, பரிசில் உள்ள நினைவிடத்தில் எரிந்துகொண்டிருக்கும் மாவீரர் சுடரில் சிகரட் பற்ற வைக்கப்பட்ட சம்பவம் பிரெஞ்சு மக்களிடம் கொந்தளிப்பையும் கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருட சிறை

பிரான்சின் சுதந்திரத்திற்காக உதிரம் சிந்திய வீரர்களை அவமதிக்கும் இவ்வாறான செயல் தேசத்திற்கு அவமானத்தை தரும் செய்கை எனவும் கண்டனங்கள் வலுத்துள்ளன.

 

இந்த நிலையில், குறித்த அவமதிப்பு செய்கைக்கு ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் 15,000 யூரோ அபராதம் விதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version