நாடாளுமன்ற உறுப்பனர் சரத் பொன்சேகாவால் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் இருக்க முடியாவிட்டால், உடனடியாக கட்சியை விட்டு வெளியேறுமாறு சஜித் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றில் நேற்று சரத் பொன்சேகா முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே(Hesha Withanage) மேற்படி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
சரத் பொன்சேகாவை சிறந்த போர் வீரர் என ஐக்கிய மக்கள் சக்தி கௌரவித்த போதும் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் என விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கடுமையாக விமர்சிப்பது பொருத்தமான விடயம் அல்ல எனவும், கட்சியில் தொடர முடியாவிட்டால் உடனடியாக வெளியேறுமாறும் தெரிவித்துள்ளார்.