Home இலங்கை கல்வி உயர்தர பரீட்சை பெறுபேறு – பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சை பெறுபேறு – பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

0

க.பொ.த.உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் (2024) மறுபரிசீலனை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மே மாதம் 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பெறுபேறு மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகள் 

மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் மூலம் சமர்பிக்கமுடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், க.பொ.த.உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (26) வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version