Home இலங்கை பொருளாதாரம் நாட்டுக்கு பல மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டித்தந்துள்ள விமானப்படை

நாட்டுக்கு பல மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டித்தந்துள்ள விமானப்படை

0

Courtesy: Sivaa Mayuri

2014ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மத்திய ஆபிரிக்கக் குடியரசில் நிலைகொண்டுள்ள விமானப்படையினரின் துணிச்சல், நிபுணத்துவம் மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக ஐக்கிய நாடுகளின் தலைமையகம் இலங்கை விமானப்படையை பாராட்டியுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இராணுவப் படைகள் மீது சர்வதேச சமூகம் வைத்துள்ள நம்பிக்கையையும் இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது என்றும், இது உலக அரங்கில் தேசத்தின் நிலையை மேம்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமானப்படையினரின் குழு

மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் பணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள விமானப் படைப்பிரிவின் புறப்படலின் போதே, உதேனி ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

20 அதிகாரிகள் மற்றும் 88 விமானப்படை வீரர்கள் அடங்கிய விமானப்படையினரின் குழு, 2024 டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்படவுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version