Home இலங்கை அரசியல் இறக்குமதி செய்யாவிட்டால் அரிசிக்கு தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இறக்குமதி செய்யாவிட்டால் அரிசிக்கு தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தேவையான அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்யாவிட்டால், நாடு பாரிய அரிசி தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க(U.K. Semasinghe), அரிசி தட்டுப்பாட்டைத் தீர்க்க அரசாங்கம் நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்

அரசாங்கம் நீண்ட கால தீர்விற்கு செல்ல வேண்டும்.இல்லையென்றால் நாடு மற்றுமொரு நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

அரிசிக்கு தட்டுப்பாடு

நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த நெருக்கடியை போக்குவதற்கு ஒரு முறையான வேலைத்திட்டத்தை தயாரித்து யால பருவத்திற்கான நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும்.

இதற்கிடையில் குறுகிய கால தீர்வாக மிக விரைவில் அரிசி இறக்குமதி செய்யப்படாவிட்டால், சந்தையில் அரிசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம் என சேமசிங்க எச்சரித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version