Home இலங்கை அரசியல் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சிலருக்கு சிக்கல் உருவாகும் ஆபத்து

கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சிலருக்கு சிக்கல் உருவாகும் ஆபத்து

0

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலருக்கு சிக்கல் உருவாகும் ஆபத்து உருவாகியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பான தங்கள் செலவுக் கணக்கை தாக்கல் செய்யுமாறு திகதி குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

எனினும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 12 பேரும், பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 1040 வேட்பாளர்களும் உரிய திகதிகளுக்கு முன்னதாக தங்கள் செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யவில்லை.

விரைவில் வழக்குத் தாக்கல்

அதன் காரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, செலவுக்கணக்கைத் தாக்கல் செய்யாத 07 வேட்பாளர்களுக்கு எதிராக கடந்த நாட்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஐந்து ​பேருக்கு எதிராக இந்த வாரத்திற்குள் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே ​போன்று செலவுக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நாள், தபால் மூலம் தனது செலவுக்கணக்கை அனுப்பிய வேட்பாளர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத 1040 வேட்பாளர்களுக்கும் எதிராக விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அவர்களால் எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version