Home இலங்கை அரசியல் வாக்களித்த மக்களை அடிப்படையாக வைத்தே வீதி அபிவிருத்தி: சாணக்கியன் குற்றச்சாட்டு

வாக்களித்த மக்களை அடிப்படையாக வைத்தே வீதி அபிவிருத்தி: சாணக்கியன் குற்றச்சாட்டு

0

வாக்களித்த மக்களை அடிப்படையாக வைத்தே வீதி அபிவிருத்தி இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (28.04.2024) இடம்பெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பாதிப்பு

குறிப்பாக மண்முனை மேற்கு பனையறுப்பான் கிராமத்திற்கு செல்லும் வீதி கிறவல் வீதியாக குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

இதனிடையில் நகர்புறங்களில் கொங்கிறீட் வீதிகளுக்கு மேல் தார் வீதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/road-development-based-people-who-voted-chanakyan-1714369834

NO COMMENTS

Exit mobile version