Home இலங்கை குற்றம் ஹட்டனில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் திருட்டு: பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை

ஹட்டனில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் திருட்டு: பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை

0

நுவரெலியா (Nuwara Eliya) – ஹட்டன் (Hatton) நகரில் உள்ள  வர்த்தக நிலையமொன்றில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக
ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவமானது, இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் நகரின் மணிகூட்டு கோபுரத்திற்கு
அருகாமையில் அமைந்துள்ள தளபாடங்கள் இலத்திரனியல் பொருட்கள் விற்பனை செய்யும்
கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரங்கள் உட்பட பொருட்கள்
திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிசிரிவி கெமரா 

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அத்துடன், பொருட்களை திருடி சென்றவர்கள் கடையின் பின்புறமாக கடையினுள்
நுழைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் கானொளிகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது. 

மேலும், கடையில் என்னென்ன பொருட்கள் களவாடப்பட்டுள்ளன என்பது தொடர்பாக சரியான
விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், இது தேர்தல் காலம் என்பதால் இவ்வாறான திருட்டு சம்பவங்கள்
அதிகரிக்கலாம். எனவே பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என பொலிஸார்
எச்சரித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version