Home இலங்கை குற்றம் ஐரோப்பாவில் சிக்கியுள்ள மற்றுமொரு இலங்கையின் முக்கிய பாதாள உலகக்குழுத் தலைவர்

ஐரோப்பாவில் சிக்கியுள்ள மற்றுமொரு இலங்கையின் முக்கிய பாதாள உலகக்குழுத் தலைவர்

0

ரஷ்ய பாதுகாப்புப் பிரிவின் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ரோட்டும்ப அமிலவுக்கு எதிராக தற்போது ரஷ்ய நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரை ரோட்டும்ப இலங்கைக்கு நாடு கடத்தப்படமாட்டர் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, குடியேற்றச் சட்டங்களை மீறி ரஷ்யாவிற்குள் நுழைந்த நிலையில், மார்ச் மாதம் ரோட்டும்ப கைது செய்யப்பட்டார்.

பாதாள உலகத் தலைவர்

பாதாள உலகத் தலைவர் ரோட்டும்ப அமிலவை ரஷ்ய பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக இன்டர்போல் மூலம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ரோட்டும்ப கைது செய்யப்பட்ட போது மேலும் பலர் அங்கு இருந்த போதிலும், அவர்கள் குறித்து இலங்கைக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

குற்றப் புலனாய்வு பிரிவு

நாட்டின் குடியேற்றச் சட்டங்களை மீறியதற்காக ரோட்டும்ப அமில தற்போது ரஷ்ய நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ரோட்டும்ப அமிலவை நாட்டிற்கு அழைத்து வரும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனைத்து ஆவணங்களும் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version