Home இலங்கை அரசியல் மாலினி பொன்சேகாவின் இறுதிச்சடங்கில் அரச அனுரசணை! அமைச்சர் விளக்கம்

மாலினி பொன்சேகாவின் இறுதிச்சடங்கில் அரச அனுரசணை! அமைச்சர் விளக்கம்

0

சிங்களத்திரையுலகின் முடிசூடா ராணி மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கில் குடும்பத்தினரின் விருப்பத்துக்கேற்பவே அரச அனுசரணை வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 பூரண அரச அனுசரணை

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கில் பூரண அரச அனுசரணை வழங்கப்பட்டது.

அவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கேற்ப சில விடயங்களைத் தவிர்ந்து கொள்ள நேர்ந்தது.

மற்றபடி அரசாங்கம் இந்த விடயத்தில் தனித்து எந்தவொரு விடயத்தையும் முடிவு செய்யவில்லை.

அதே ​போன்று உயிரிழந்தவரின் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப அவரவருக்கான அரச மரியாதை, அரச அனுசரணையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version