Home இலங்கை ஐக்கிய அமீரகத்தில் சிறை தண்டனை அனுபவித்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

ஐக்கிய அமீரகத்தில் சிறை தண்டனை அனுபவித்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

0

ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) பல்வேறு இடங்களில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபிக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு  இலங்கைத் தூதரகத்திற்கு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

 இலங்கையர்களுக்கு இந்த  பொது மன்னிப்பானது ஐக்கிய அரபு அமீரக அரச மன்னிப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்…!

பொது மன்னிப்பு 

 புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி மன்னிப்பு வழங்கப்பட்ட இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பொதுமன்னிப்பு வழங்கியமைக்காக அமீரகத்தின் அரசாங்கம், வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபிக்கான இலங்கைத் தூதுவர் உதய இந்திரரட்ன இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய உள்ளூராட்சி மன்ற தேர்தல்: பின்னடைவை சந்திக்கும் ஆளும் கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version