ஆளும் தரப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தற்போத வேடிக்கையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் உள்ள இலங்கை பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
159 ஆளும் கட்சி உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தில் உள்ள 159 ஆளும் கட்சி உறுப்பினர்களின் வருகை மிகவும் மோசமாக உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் குறித்து நாமல் ராஜபக்ச தனது கருத்துக்களைத் தெரிவித்தபோது, நிதித்துறை சார்ந்த அமைச்சர்கள் இருவரில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார் .
அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற அமைச்சர்களில் ஒருவர் மாத்திரமே கலந்து கொண்டார்.
அப்போது நாடாளுமன்றத்தில் குறைந்தது 30 உறுப்பினர்கள் மாத்திரமே காணப்பட்டனர்.
ஆரம்ப நாட்களில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய வரிசைகள் இருந்தபோதிலும், தற்போது அவ்வாறு இருப்பது அரிதாகவே காணப்படுகிறது”. என்றார்.
