Home இலங்கை இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் மேற்கு உலகை கண்டிக்கும் ரஷ்யா

இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் மேற்கு உலகை கண்டிக்கும் ரஷ்யா

0

Courtesy: Sivaa Mayuri

காசா, யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வெளிவரும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பில தனி நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் கொண்டுள்ள மேற்கு உலக நாடுகள், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் மேற்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து ரஷ்ய தூதரகம்(Embassy of the Russian) கவலை தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் இலங்கைக்கு, வெளியில் இருந்து அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தூதரகம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து 211 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு நேர்ந்த கதி! பலர் படுகாயம்

இரட்டைத் தரக் கொள்கை

பல மேற்கத்திய அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்பினர், தங்கள் விமர்சன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் குறித்த நீதியின் தூதர்களின் நிலைப்பாடுகளின் குழப்பநிலை உள்ளதாக ரஷ்ய தூதரகம் கூறியுள்ளது. இந்த தூதர்கள் காசா, யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளின் விடயங்களில் மாற்றுக்கொள்கையை கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் குறித்த ஆளுமைகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் இரட்டைத் தரக் கொள்கைக்காக நன்கு அறியப்பட்டுள்ளன என்றும் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. 

கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது

வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version